உள்நாட்டு செய்திகள்

சுதந்திரக் கட்சி பிரசாரக் கூட்டங்களுக்கு ஜனாதிபதி தலைமை தாங்கமாட்டார்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒதுங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கட்சி தரப்பினரிடையே பதற்ற சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.

அதேநேரம் சிறிசேன பிரசாரங்களில் பங்கேற்காத நிலையில்,  மஹிந்த ராஜபக்ஷவை பிரசாரக்குழு தலைவராக நியமிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா வலியுறுத்திய போதும் ஜனாதிபதி அதற்கு இணங்கவில்லை.

இது தொடர்பில் இறுதித்தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனுவை வழங்க சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருடன் ஜனாதிபதி இணக்கத்தை ஏற்படுத்தினார்.

எனினும் ஊழல் மற்றும் ஏனைய கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வேட்புமனு வழங்குவதில்லை என்று அவர்கள் உடன்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(riz)

 

 

 

 

Related posts

பொலன்னறுவையில் 09 மணி நேரம் நீர் விநியோகம் தடை…

wpengine

தேர்தல் கடமைகளிலிருந்து விலகியிருக்கும் அரச அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம்…

wpengine

எரிபொருள் விநியோகத்தில் ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

wpengine