உள்நாட்டு செய்திகள்

கொழும்பு நகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள குப்பை பிரச்சினை…



கொழும்பு நகரில் குப்பை பிரச்சினை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரச மற்றும் தனியார் துறைகள், முப்படைகள், மற்றும் பொலிசாரின் ஆதரவு இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் குப்பை பிரச்சினை உள்ளிட்ட கொழும்பு நகரின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கொழும்பில் நேற்று(21) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் சிறந்த பயனை அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை…

wpengine

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரங்கள்

wpengine

நாலக டி சில்வா சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு..

wpengine