உள்நாட்டு செய்திகள்

பிரதியமைச்சர் ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு..



நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிக்கும் குரல் பதிவை எதிர்வரும் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

———- UPDATE 

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்ற முன்னிலையில்…

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று(20) உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே அவர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma

Related posts

கூட்டு எதிர்க்கட்சி பா.உறுப்பினர்களின் சம்பளம் நிவாரணங்களுக்காக.. – அரசின் 10 இலட்சம் எங்கே..?

wpengine

யாழ் பல்கலைக்கழக மோதல் விவகாரம் – வழக்குகளை வாபஸ்பெற முடிவு.

wpengine

கறுவாப்பட்டை இறக்குமதி, மீள் ஏற்றுமதியினை தடைசெய்ய அமைச்சரவை அனுமதி.

wpengine