கேளிக்கை

பரப்பரப்பை ஏற்படுத்திய ‘நாச்சியார்’…



பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் டீசரில் ஜோதிகா பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஜோதிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நாச்சியார்’. பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் ஜோதிகாவும் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டீசரில் ஜோதிகா பொலிஸ் அதிகாரியாக தோன்றி இருக்கிறார். மேலும் சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

டீசரின் இறுதியில் ஜோதிகா ஒரு இளைஞனை அறைந்துவிட்டு கோபத்துடன் கெட்ட வார்த்தையில் திட்டுகிறார். தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

TV நிகழ்ச்சி தொகுப்புகளில் இருந்து DD விடை பெற்றார்..

wpengine

மும்பையில் பிரபல நடிகை ரகசிய திருமணம் – ரஷ்ய காதலரை மணந்தார்…

wpengine

‘வில்லா டூ வில்லேஜ்’ பிரபலம் வெள்ளித்திரையிலும் ரசிகர்களை கவர வருகிறார்…

wpengine