உள்நாட்டு செய்திகள்

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது…



யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 10 இந்திய மீனவர்களை நேற்று(15) இரவு கடற்படையினர் கைதுசெய்து யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் இன்று(16) கையளித்தனர்.

குறித்த மீனவர்கள் ஒரு படகுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த இந்திய மீனவர்கள் ஜகாதாப்பட்டிணம், தங்கட்சி மடம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவர்களை இன்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜராக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.

Related posts

தபால் திணைக்கள ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகின்றனர்…

wpengine

ஹில்டன் பணிப்பாளர் சபையை இராஜினாமா செய்ய பிரதமர் பணிப்பு

wpengine

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 687 பேர் கைது

wpengine