உள்நாட்டு செய்திகள்

கட்டாய பாடமாக தகவல் தொழில்நுட்பம் மாறுகிறது…



பாடசாலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பம் கட்டாய பாடமாக மாற்றப்படும் என்று அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் குளியாப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டார்.

கிராம மட்டத்தில் தகவல்தொழில்நுட்ப பாட அறிவை மேம்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எதிர்காலத்தில் அனைத்துப் பாட விதானங்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் முக்கிய பாடமாக அமையவுள்ளது எனவும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு முறையான தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்க கல்வி அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

2018 முதல் நாடு தழுவிய ரீதியில் இந்திய அம்பியுலன்ஸ் சேவை…

wpengine

கிறிஸ்தவ மக்களால் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிப்பு

Azeem Kilabdeen

இடியப்பத் தட்டுகள் உட்பட சிலவற்றுக்கு தடை

wpengine