உள்நாட்டு செய்திகள்

அவுஸ்ரேலிய கடற்படை கப்பல் இலங்கையில்…



அவுஸ்திரேலிய கடற்படை கப்பல் நியூகாஸ்ரல் (HMAS Newcastle) நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு இன்று(14) வருகை தந்த இக்கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

184 பேர் பணியாற்றும் இக்கப்பல் 138.1 மீட்டர் நீளமும் 14.3 மீட்டர் அகலமும் 4200 டன் கொள்ளளவும் கொண்டதாகும்.

இங்கு 04 நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்படவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

எதிர்வரும் 17 ஆம் திகதி இக்கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டுச்செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

லக்ஷமன் கதிர்காமர் கொலை தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது…

wpengine

சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்கவும்

wpengine

எல்லை நிர்ணய அறிக்கையில் ஸ்ரீ.சு.கட்சியும் கையொப்பம்..

wpengine