உள்நாட்டு செய்திகள்

இன்றும் சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக அடுத்த சில தினங்களில் குறைவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடமாகாணத்தின் ஊடாகவும் மற்றும் தென்மாகாணத்தின் கடற்கரையோரங்களிலும் வலுவான காற்று வீசக்கூடும் எனவும் வடக்கு , வடமேற்கு , மேற்கு , மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் ஓரளவு மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகள் காலை வேளைகளில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை காணப்படும்.

காங்கேசன்துறையிலிருந்து முல்லலைத்தீவு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரைப்பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் திணைக்களம் இன்று(13) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வாக்களிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு..

wpengine

மாத்தறை மாவட்டம்

wpengine

இலங்கை – ஜப்பானியத் தலைவர்கள் இருதரப்பு உறவுகளை மென்மேலும் வலுப்படுத்த உறுதி…

wpengine