உள்நாட்டு செய்திகள்

ஊழல் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்..



ஊழல் மோசடிகள் மற்றும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசேட மேல் நீதிமன்றம் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட மூன்று தீர்ப்பாயங்கள் இதற்கிணங்க அமைக்கப்படவுள்ன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(07) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது விசேட மேல் நீதிமன்றங்களை அமைப்பதற்காக பிரேரணையினை நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள முன்வைத்தார். குறித்த இந்த பிரேரணை தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியது.

 

E – (reeshma)

Related posts

ஜனாதிபதியின் புதிய செயலாளராக P.B ஜயசுந்தர

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

wpengine

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர வேண்டும் என்பதே தீர்ப்பு – சுமந்திரன்

News Editor