கேளிக்கை

சூரிக்காக படப்பிடிப்பில் இருந்து அவசரமாக வந்தார் சிவகார்த்திகேயன்..



ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் படப்பிடிப்பில் இருந்த சிவகார்த்திகேயன், காமெடி நடிகர் சூரிக்காக அவசரமாக மதுரை திரும்பி இருக்கிறார்.

‘வென்னிலா கபடிக்குழு’ படம் மூலம் பரோட்டா சூரி என்று பெயர் பெற்ற இவர், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகிறார்கள். சூரி தற்போது மதுரையில் ஓட்டல் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த ஓட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திறந்து வைத்துள்ளார். மேலும் இந்த ஓட்டலுக்கும் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷும் கலந்துக் கொண்டார்.

சூரியின் ஓட்டலை திறந்து வைப்பதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் ‘வேலைக்காரன்’ படப்பிடிப்பில் இருந்து மிக அவசரமாக வந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Related posts

‘அருவி’ இந்தியிலும் 

wpengine

விவாகரத்தும் சமந்தாவின் அறிக்கையும்

wpengine

அட்லீக்கு பிற நடிகர்களுடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தல் – விஜய் அதிரடி

wpengine