உலக செய்திகள்

மசூதியில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்- 150 பலி



நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர். லேக்சாட் அருகேயுள்ள குன்குவா உள்ளிட்ட 3 கிராமங்களில் நேற்று முன்தினம் மாலை சுமார் 50 தீவிரவாதிகள் புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்த மசூதிகளில் புகுந்தனர். அப்போது அங்கு தொழுகைகள் நடந்து கொண்டிருந்தது. அதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

மேலும் வீடுகளிலில் புகுந்தும் தாக்குதல் நடத்தினார்கள். சம்பவ இடத்திலேயே 50 க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். காயம் அடைந்த 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்கை பலன் அளிக்காமல் குழந்தைகள் உள்பட பலர் உயிர் இழந்தனர். இதனால் சாவு எண்ணிகைக 150 ஆக உயர்ந்தது.

அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். மங்குனோ கிராமத்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள் வீடுகளுக்குள் புகுந்து வெறியாட்டம் நடத்தினர். அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சுட்டுக் கொன்றனர். அக்கிராமத்துக்கு தீ வைத்தனர்.

(riz)

Related posts

வழமைக்கு திரும்பும் வுஹான் நகரம்

wpengine

பரபரப்புக்கு மத்தியில் கட்டாரிற்கு F15 ரக ஜெட் போர் விமானங்களை விற்கிறது அமெரிக்கா..

wpengine

‘ஆப்பிள் பயர்’ – தொடர்ந்தும் எரிகிறது

wpengine