கேளிக்கை

பிரியா பவானிக்கு அடித்தது அதிர்ஷ்டம் – கார்த்தியை தொடர்ந்து விஜய்…



விஜய் சேதுபதி, சாயிஷா சைகல் நடித்து வரும் படம் ஜுங்கா. படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஜுங்கா படத்தின் படக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. காமெடி, ஆக்ஷன், காதல், என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ஜுங்கா உருவாகி வருகிறது.

இந்நிலையில் படத்தில் இன்னொரு கதாநாயகியாக மேயாத மான் படத்தில் அறிமுகமான பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேயாத மான் படத்தில் பிரியா பவானி சங்கரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனையடுத்து விஜய் சேதுபதி நடிக்கும் ஜுங்கா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையினையும் விட்டு வைக்காத ICE.. புதுவகை எமன்.. [PHOTOS]

wpengine

2016 இலங்கையில் பிரபலமான மொடல்கள் 10 பேரும் இவங்க தானாம்..

wpengine

நிர்வாணமாய் நின்று பணம் சம்பாதிக்கும் மனித நாகரீகம்… (PHOTOS)

wpengine