கேளிக்கை

முதன் முறையாக அறிக்கை வெளியிட்டார் விஜய்…



மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்தற்கு நடிகர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மெர்சல் திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மாபெரும் வெற்றியடைந்துள்ள மெர்சல் திரைப்படத்திற்கு சில எதிர்ப்புகளும் வந்தன.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் கலையுலகைச் சார்ந்த நண்பர்களான, நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், மற்றும் தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையை சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பா, நண்பிகள் (ரசிகர்கள், ரசிகைகள்) பொதுமக்கள் அனைவரும் எனக்கும், மெர்சல் படக்குழுவினருக்கும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள்.

மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெற செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும், அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

நிர்வாணமாய் ஆட சவால்விட்ட பாக். நடிகை கதறியழுகிறார் (VIDEO)

wpengine

அடுத்த படத்திற்காக புதிய அவதாரம் எடுக்கும் திரிஷா…(PHOTO)

wpengine

Tokyo Disneyland மூடப்படுகிறது

wpengine