உள்நாட்டு செய்திகள்

திவுலப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட திருப்புமுனை..



திவுலப்பிட்டியவில் நேற்று(23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைதான மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோவின் வீட்டில் இருந்து 100க்கும் அதிகமான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினரது மனைவி நேற்று(23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

திவுலிபிட்டிய ஹேன்பிட்டகெதர பிரதேசத்தல் காவற்துறையினரின் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கொள்ளையாளர்கள் சிலருக்கு இடையே நேற்று இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூடுகளில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இதுவரையில் குறித்த இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கொள்ளையர்கள் பயணித்த வேனில் பாதாள குழு உறுப்பினர்கள் 11 பேர் வந்துள்ளமை, காவற்துறை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட முதல்தர விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ள நிலையில், அதில் ஒருவர் களுத்துறை சிறைச்சாலை பேரூந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் பொல்வத்த நிஷான் என காவற்துறை விசேட அதிரடிப்படை மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச விசாரணை ஒன்றே அவசியம் – கோட்டாபயவுக்கு ஆதரவளித்த மல்கம் ரஞ்சித், எனக்கெதிராக வாக்களிக்க கூறினார்..!

wpengine

இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு அவசர சிகிச்சை பிரிவில்

wpengine

உயிர்த்தஞாயிறு குண்டுதாக்குதல்களை பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே திட்டமிட்டனர்..!

wpengine