வாழ்க்கை

இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர்கள் மனநலம் பாதிக்கும் அபாயம்…



சிறுவர்கள் இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் மனநலம் பாதிக்கும் என கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக்கழக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகள் குறித்து கிரிப்த் பல்கலைக்கழகம் மற்றும் முர்டேக் பல்கலைக் கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.இதில் 8 முதல் 11 வயது வரையிலான 1100 சிறுவர், சிறுமிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் சிறுவர், சிறுமிகளின் தூக்கம் பாதிப்பு, மனநலம் பாதிப்பு உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும். இதனால் உளவியல் கோளாறுகள் ஏற்படும். மன அழுத்தம் உண்டாகும் என தெரியவந்துள்ளது.

எனவே இரவில் தூங்குவதற்கு முன்பு ஸ்மார்ட் போனில் பேசுவது, வீடியோ பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற செயல்களில் சிறுவர், சிறுமிகள் ஈடுபடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடலின் இரத்த அளவை அதிகரிக்கும் தேன்

wpengine

உதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெய் தடவுங்க..

wpengine

சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா?

wpengine