உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் இன்று கடும் மழை…



நாட்டில் இன்று(20) தென்மேற்கு பகுதியில் பல மாகாணங்களில்100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து மாத்தறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் நிலையில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடும் மழைக் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிய ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பிரதமருக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

wpengine

ISIS இயக்கத்தில் இணைந்ததாக கூறப்படும் கேரளா தம்பதி இறுதியாக இரண்டு மாதங்கள் இலங்கையில்..?

wpengine

இடமாற்றத்திற்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அஜித் ரோஹனவிடமிருந்து கடிதம்

News Editor