உள்நாட்டு செய்திகள்

சைட்டம் பிரச்சினைக்குத் தீர்வு காண பொதுமக்கள் ஆணைக்குழு…



சைட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தேர்வு காணும் வகையில் பொதுமக்கள் ஆணைக்குழுவொன்றை நியமிக்கும் நிகழ்வு நேற்று(12) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

மேலும், இந்த ஆணைக்குழுவின் 06 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் ஆணைக்குழுவின் தலைவராக களனி பல்கலைகழக பேராசிரியர் கிருஷாந்த அபேசேனவும் செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் சாரத கன்னங்கரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் 28 நாட்கள் குறித்த ஆணைக்குழு செயற்படவுள்ளதொடு எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட தீர்மானித்துள்ளது.

இதற்காக அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், மாணவ அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துக்களையும் பெற்று கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

Related posts

சட்டவிரோதமாக தங்கம் கடத்த முற்பட்ட நால்வர் கைது

wpengine

ரணிலின் ஆட்டம் ஆரம்பம், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்..!

wpengine

வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழு நாளை சந்திப்பு

wpengine