உலக செய்திகள்

கட்டலோனியா தலைவருக்கு 05 நாட்கள் காலக்கெடு…



ஸ்பெயினில் இருந்து பிரிவது தொடர்பாக ஐந்து நாட்களுக்குள் முடிவெடுக்குமாறு கட்டலோனியா தலைவருக்கு ஸ்பெயின் பிரதமர் கால அவகாசம் கொடுத்துள்ளார்.

கட்டலோனியா தனி நாடாக பிரிவது தொடர்பாக நடத்திய வாக்கெடுப்பில் 90% வீதமானோர் பிரிவதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தனிநாடாக பிரிவது உறுதி என கட்டலோனியா தலைவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனிநாடாக பிரிவது குறித்து பரிசீலனை செய்து ஐந்து நாட்களுக்குள் முடிவை அறிவிக்குமாறு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியுள்ளார்.

கட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஸ்பெயின் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமானது என ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான இறுதி முடிவை எடுக்க கட்டலோனியா தலைவருக்கு ஐந்து நாட்கள் காலஅவகாசம் வழங்குவதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் தெரிவித்துள்ளார்.

Related posts

காவிரி பிரச்சினை – களத்தில் கலவர தடுப்பு சிறப்பு பிரிவினர்..

wpengine

ஆகஸ்ட் 28 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை…

wpengine

இராணுவ ஆட்சிக்கு எதிராக சூடான் வீதிகளில் பலத்த போராட்டம் – 7 பேர் பலி

wpengine