உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பின்லாந்து சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் சந்திப்பு…



பின்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் பிர்க்கோ மற்றிலா​வை சந்தித்துள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமை, சமூக சமநிலை, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இலங்கைக்கும் பின்லாந்திற்கும் இடையில் இருந்துவரும் அடிப்படை, சமமானதாக இருப்பதாக அமைச்சர் பிர்க்கோ மற்றிலா குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி மற்றும் தொழிற்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை மேலும் விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இரு நாடுகளுக்குமிடையில் இலவச சுகாதார சேவை, இலவச கல்விச் சேவை தொடர்பில் நீண்டகால வரலாறு உண்டு என குறிப்பிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த வரலாற்று அனுபவங்களுடன் குறித்த சேவைகளை பயனுள்ளதாக முன்னெடுத்து, தற்போதைய காலத்திற்கேற்ற வகையில் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மேலும், பின்லாந்து சுதந்திரம் பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும் தருணத்தில், ரணில் விக்ரமசிங்க தமது நாட்டுக்கு வருகைதந்தமையை விசேடமாக கௌரவிப்பதாக அந்நாட்டின் சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் பிர்க்கோ மற்றிலா இதன்போது குறிப்பிட்டார்.

Related posts

விசா மற்றும் அறவிடப்படும் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

நாட்டின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

wpengine

எரிபொருள் நிலையங்களில் இரவு நேரத்தில் பாரிய வாகன வரிசை

Azeem Kilabdeen