உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் – மேலும் அறுவர் கைது…



ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, குழப்ப நிலையை ஏற்படுத்தியமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த இந்த சம்பவம் தொடர்பில் நேற்று(09) கைது செய்யப்பட்ட நால்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று(10) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

ஒதுக்கீட்டு சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று

wpengine

ரிசாத் பதியூதீனின் மேன்முறையீட்டு மனு விசாரணை ஒத்திவைப்பு

wpengine