வணிகம்

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…



இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வரையில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 077 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வருடத்தில் இத்தொகை ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா, உக்ரைன், தெற்காசியா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

எகிறும் தங்கத்தின் விலை

wpengine

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

wpengine

கடனுக்கான வட்டி அதிகரிப்பு எனின் மீளவும் கடன் கேட்பது எதற்காக என சீனத் தூதுவர் ரவியிடம் கேள்வி..

wpengine