உள்நாட்டு செய்திகள்

சம்பளம் அதிகரிப்பின் சுகாதார சேவைக்கும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் – இன்றேல் தொழிற்சங்க போராட்டம்..



புகையிரத சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் ஊழியர்கள் தங்களது சம்பளத்தை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தற்பொழுது நடைமுறையிலுள்ள சம்பள முறைமைக்கு மாற்றமான முறையில் குறித்த இந்த சம்பள அதிகரிப்பைக் கோரியுள்ளதாகவும் அவ்வமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று(09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரச சேவை சம்பள ஆணைக்குழு என்பவற்றுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயில் சேவைக்கோ அல்லது வேறு சேவைகளுக்கோ சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாயின் அதற்கு சமாந்திரமாக சுகாதார சேவைக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

இன்று முதல் வரிகள் இரத்து

wpengine

ஆட்பதிவுத் திணைக்களம் சனிக்கிழமையும் திறந்திருக்கும்..

wpengine

இலங்கைக்கு வந்தவர்களை 119 ஊடாக பதிவு செய்யும் நடவடிக்கை

wpengine