ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதி போட்டியிட்ட கட்சியின் தலைவரின் கைதும்.. தாய்வான் வங்கி ஊழலும்.. – விசாரணைகளுக்கு தாய்வானிலிருந்து விசேட குழு..



முன்னணி சமையல் எரிவாயு நிறுவனத்தின் (Litro Gas) தலைவரான சாலிய முனசிங்க, நியூயோர்க்கிலுள்ள தாய்வான் வங்கியின் இணையத்திற்குள் அத்துமீறி நுழைந்து 32 கோடி ரூபாவை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இவர் நேற்று(09) இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் சாலிய முனசிங்க சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர் தனது சட்டத்தரணி ஊடாக இரகசிய பொலிஸாரிடம் நேற்று(09) சென்று சரணடைந்திருந்தார்.

இந்நிலையில் தாய்வானிலிருந்து விசேட குழுவொன்று மேலதிக விசாரணைகளை நடத்துவதற்காக இலங்கை வருகைதர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி கட்சியை சாலிய முனசிங்வே ஸ்தாபித்திருந்தார்.

இதே கட்சியின் கீழான அன்னப்பட்சி சின்னத்தில்தான் நல்லாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(riz_mira)

Related posts

காட்டுக்குள் திமிங்கிலம்…(PHOTOS)

wpengine

ரஜினியை பற்றி சி.வி.விக்னேஸ்வரன் கூறியது என்ன?

wpengine

பிணைமுறி மோசடி குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் டலஸ்

wpengine