உலக செய்திகள்

ரஷ்யாவில் கட்டுமானப் பொருட்கள் சந்தையில் தீ விபத்து…



ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள, கட்டுமானப் பொருள்களுக்கான சந்தையில் நேற்று(08) திடீரென தீப்பற்றியுள்ளது. மரச்சாமான்கள் அதிக அளவில் இருந்ததால், தீ வேகமாக பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அச்சந்தையினுள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் 3000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

.நீண்ட நேரத்திற்கு பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகிய போதும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குத்துச்சண்டை கலையின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அலியின் இறுதிக்கிரியைகள் இன்று

wpengine

பேரூந்து தீ பிடித்ததில் 46 பேர் பலி

wpengine

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

wpengine