உள்நாட்டு செய்திகள்

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்தால், மக்களுக்காக அரசு நட்டத்தினை ஏற்கும்..



லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் பொது மக்களுக்காக நட்டத்தின் மத்தியிலேனும் எரிபொருளை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் , எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டாம் என லங்கா ஐஓசி நிறுவனத்திடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இம்மாத ஆரம்பத்தில் பெட்றோல் மற்றும் டீசலின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கடந்த 30ம் திகதி லங்கா ஐஓசி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

தற்போது உலக சந்தையில் நிலவும் விலையின் அடிப்படையில் , பெட்றோல் லீற்றர் ஒன்றில் 17 ரூபாவும மற்றும் டீசல் லீற்றர் ஒன்றில் 14 ரூபாவும் நட்டத்தை சந்தித்து வருவதாக குறித்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

விலையை அதிகரிப்பது தொடர்பில் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை நிதி அமைச்சுக்கு மற்றும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் அனுப்பியுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கடந்த தினத்தில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!

wpengine

முட்டை இறக்குமதி: இந்திய நிறுவனத்திடம் தரச் சான்றிதழ் கோரும் இலங்கை

News Editor

மைத்திரியுடன் போடும் விளையாட்டுக்களை ரணிலுடன் போட முடியாது

wpengine