கேளிக்கை

நடிகர் ஜெய்’யை கைது செய்ய நீதிமன்ற பிடியாணை..



கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ஜெய் மதுவிருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு போதையில் காரை ஓட்டியபடி வீடு திரும்புகையில், நிதானம் இழந்து அடையாறு பாலத்தின் மீது மோதி விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பொலிஸார் ஜெய் மீது பல்வேறு பிரிவுகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது ஜெய்க்கு இரண்டாவது போதை சம்பவம் என்பதால் அவரது ஓட்டுனர் உரிமத்தை இரத்து செய்யவும் சிபாரிசு செய்துள்ளனர். குறித்த இந்த வழக்கு சைதாப்பேட்டை பெருநகர 4வது நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில், குறித்த வழக்கின் விசாரணை நேற்று(05) நிறைவுக்கு வந்துள்ளது.

ஆனால் ஜெய் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய்யை கைது செய்து ஆஜர் படுத்தும் பிடியாணை உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

இதைத் தொடர்ந்து இன்று(06) அல்லது நாளை(07) ஜெய் நீதிமன்றத்தில் அஜராகலாம் என்று தெரிகிறது. இல்லாவிட்டால் அவர் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறன.

 

(rizmira)

Related posts

இவ்வாண்டுக்கான நகைச்சுவை வனவிலங்கு புகைப்படங்கள் சில [PHOTOS]

wpengine

அருண் விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சந்தானம்

wpengine

வேட்டையாடு விளையாடு 2 படத்திற்கான தயாரிப்புகள் ஆரம்பம்

wpengine