உள்நாட்டு செய்திகள்

ஆனந்த சமரசேகரவின் கைது குறித்த முக்கிய தீர்ப்பு எதிர்வரும் 19 அன்று..



பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைது செய்வது குறித்த முக்கிய தீர்ப்பை எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆனந்த சமரசேகரவை கைது செய்ய அனுமதி கோரி மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தது. அது தொடர்பில் நேற்று(03) ஆராய்ந்த நீதிமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்ப்பை அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஆனந்த சமரசேகர கொழும்பு மேல் நீதிமன்றில் முன் பிணை கோரி உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வேலைநிறுத்தம்

Azeem Kilabdeen

SLFP தலைமை மீளவும் மைத்ரிக்கு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் விசேட குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine