கேளிக்கை

திரில்லர் படத்தில் நடிக்கும் வரலட்சுமி…



வரலட்சுமி நடிக்கவிருக்கும் புதிய படத்திற்காக இயக்குநர் சந்தோஷ் சிவனும், நடிகர் சிவகார்த்திகேயனும் இணையவிருக்கின்றனர்.

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி எழுதி, இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் பெயருடன் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் எதிர்வரும் 5-ஆம் திகதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் விக்கேஷ் சிவன் வெளியிடுகின்றனர்.

சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை பேப்பர் லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். எதிர்வரும் 15-ஆம் திகதி படப்பிடிப்பு ஆரம்பமாகின்றது.

Related posts

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்து விட்டார் மாதவன்..

wpengine

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் – முதலிடம் பிடித்த இளம் நடிகை…

wpengine

இலங்கைக்கு உயரிய விருதை அளித்த மஹேல மற்றும் மஹேலவின் குட்டிப்பாப்பா.. (PHOTOS)

wpengine