கேளிக்கை

விஜய்யுடன் மோதும் நயன்தாரா?



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, விஜய்யுடன் தீபாவளியில் மோதவிருப்பதாக கூறப்படுகிறது.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவின் `வேலைக்காரன்’ படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `அறம்’ படம் அந்த இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கொட்டப்படி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இக்கதையையும், படத்தில் துணிவாகவும் திறம்படவும் அலசப்பட்டிருக்கும் சமுதாய பிரச்சனைகளையும் மனமார பாராட்டியுள்ளனர். இந்த பாராட்டு ‘அறம்’ பட குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் விரைவில் பிரம்மாண்டமாக ரிலீசாகவுள்ளது. ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ‘அறம்’ உருவாகியுள்ளது.

படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு விஜய்யின் `மெர்சல்’ படமும், அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா’ படமும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts

அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் இவற்றை இழந்தேன்…

wpengine

போதை பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள்

wpengine

நடிகர்கள் மவுனப் போராட்டம் – புறக்கணித்த முன்னணி நடிகைகள்… (photos)

wpengine