உள்நாட்டு செய்திகள்

அவன்கார்ட் நிஷ்சங்க சேனாதிபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு..



அவன் கார்ட் நிறுவன தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித பெர்ணாந்து ஆகியோரை ஒக்டோபர் (03) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் நேற்று(25) உத்தரவிட்டது.

ரூபா 355 இலட்சம் இலஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு இவ்விருவருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை 5 ஆம் இலக்க நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகிறது. ஆனால் நேற்று(25) நீதிபதி பிரசன்னமாகியிருக்காத நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேசேர முன்னிலையில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டனர். இந்நிலையில் இவ்விருவரையும் எதிர்வரும் 03ம் திகதி 05ம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடல் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வழங்கும் நடவடிக்கைகளை கடந்த ஆட்சியில் ரத்னா லங்கா நிறுவனம் மற்றும் அவன் கார்ட் நிறுவனம் என்பன இணைந்து மேற்கொண்டன. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோதபய ராஜப்கஷவின் தலையீட்டின் கீழ் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடி இடம்பெற்றிருந்ததாக இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

 

(rizmira)

Related posts

எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகும் அனைத்து தனியார் பேரூந்துகளும் பணிப்புறக்கணிப்பில்

wpengine

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை…

wpengine

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை

wpengine