உள்நாட்டு செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் – கோப் குழு விசேட அறிக்கை..



மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் தொடர்பில் கோப் குழு விசேட அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி வரை முன்னெடுக்கப்படுகின்ற குறித்த இந்த அதிவேக நெடுஞ்சாலைக்கான விலை மனு கோரலில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயும் முகமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையின் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்தவுடன், அது தொடர்பான கணக்காய்வு அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும்…

wpengine

மேல் நீதிமன்றங்களில் நாள் தோறும் வழக்கு விசாரணை…

wpengine

பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு – சந்தேக நபருக்கு 37 வருட கடூழிய சிறை

wpengine