உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்துக்களினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…



2017ஆம் ஆண்டின், ஜனவரி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற விபத்துக்களில் 1789 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் 533 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் 588 பேர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்து விபத்திற்குள்ளாகியதில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை வாகன விபத்துக்களில் 142 சாரதிகள் உயிரிழந்துள்ளதுடன் 256 பயணிகள் காயமடைந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

அமைச்சர் சரத் பொன்சேகாவும் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய வலியுறுத்து…

wpengine

மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் நிறுவனம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

wpengine

உத்தேச நிதி யோசனை தொடர்பான வாதங்கள் முடிவுக்கு

wpengine