உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போருக்கு பின்னர் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியது..



போருக்கு பின்னர் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் இலங்கையின் மீள்கட்டியெழுப்பல் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதென அமெரிக்காவின் அரசியல் விவகாரா உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக உத்தியோகபூர்வ அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க அரசியல் விவகார உதவி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் அவர்களுக்குமிடையிலா சந்திப்பு நேற்று(21) நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான நீண்டகால உறவுகளை நினைவூட்டிய ஜனாதிபதி, அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள நாடென்ற வகையில் இலங்கை பிராந்திய நாடுகளுடன் பேணி வரும் ஒத்துழைப்பு செயற்பாடுகளை பாராட்டிய தோமஸ் ஷெனன், அனைத்துச் சகோதர நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சிறந்த முன்னுதாரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படாதென ஜனாதிபதிக்கு உறுதியளித்த உதவி இராஜாங்க செயலாளர், எதிர்வரும் நவம்பர் மாதமளவில் இலங்கை விஜயத்தில் ஈடுபட எதிர்பார்ப்பதாகவும் இதன் போது தெரிவித்தார்.

 

(rizmira)

Related posts

ஆறு இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி வழங்கும் நிகழ்வு

wpengine

இம்முறை வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இல்லை

wpengine

தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் மெதகும்புர பகுதியில் போக்குவரத்து தடை..

wpengine