உள்நாட்டு செய்திகள்

தெதுரு ஓயா பாலம் 25 – 30 வரை மூடப்படும்..



தெதுரு ஓயா பாலத்தின் ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 30ம் திகதி வரை முற்றாக நிறுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கட்டுகஸ்தொட்ட – புத்தளம் வீதியில் அமைந்துள்ள தெதுரு ஓயா பாலம் இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி குறித்த இந்த காலப்பகுதியில் உந்துருளிகள், முச்சக்கரவண்டிகள் மற்றும் இலகு ரக வாகனங்கள் பாதெனிய – அநுராதபுரம் வீதியில் பலல்ல ஊடாக நிகவரெட்டிய வீதியையும், கனரக வாகனங்கள் பாதெனிய – அநுராதபுரம் வீதியில் தலதகம ஊடாக நிகவரெட்டிய வீதியையும் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த சீனா தீர்மானம்…

wpengine

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு கோரிக்கை

wpengine

யோஷிதவுக்கு கடற்படையில் விசாரணை கிடையாது

wpengine