ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரியங்காவின் திரையுலகில் இணைகிறாரா மலாலா..



பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுடன் நோபல் பரிசு பெற்ற மலாலா நியூயார்க்கில் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமைதிகான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் கடந்த இரண்டு மாதங்களாக டுவிட்டர் போன்ற இணையதளங்களின் மூலம் தனது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். உதாரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சேர்ந்தது போன்ற நிகழ்வுகளையும் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில் யுனிசெப் நல்லெண்ண தூதுரான நடிகை பிரியங்கா சோப்ராவை மலாலா சந்தித்து பேசினார். நியூயார்க்கில் நடந்த இந்த சந்திப்பு குறித்து மலாலா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், பிரியங்காவை சந்தித்ததை நம்ப முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிரியங்கா மலாலாவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பதில் டுவிட் செய்திருந்தார்.

அப்போது அவர்கள் எடுத்த புகைப்படம் இணையதளங்களில் பதிவு செய்யப்பட்டது. தற்சமயம் இது வைரலாக பரவி வருகிறது.

மேலும், தங்கள் சந்திப்பு குறித்து பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார். மலாலாவின் தந்தை தனது தந்தையை ஞாபகப்படுத்துவதாக பிரியங்கா தெரிவித்தார். மேலும் மலாலாவை தனது சகோதரி என்றும் தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ராவுடன் மலாலா சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

(riz_mira)

Related posts

பதுளையில் சிகிச்சை பலனின்றி சீனப்பிரஜை உயிரிழப்பு

wpengine

கடிதத்தால் கைதிலிருந்து தப்பிக்கொண்ட இராஜாங்க அமைச்சர்

wpengine

சர்வதேசத்தில் சீரழியும் இலங்கைக் கொடி

wpengine