ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரோஹிங்யா முஸ்லிம் படுகொலைகளை ஆதரிக்க முடியாது.. – உண்மையில் கண்ணீர் சிந்தினாரா ஞானசார தேரர்..?



மியன்மார் – ரோஹிங்யாவில் இடம்பெறும் பிரச்சினைகளுக்கு மக்களை கொலை செய்வதன் மூலம் தீர்வு காண முடியாது, நாம் அதை ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில்;

“..இந்நாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறித்து நான் வெட்கப்படுகின்றேன்.

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்குச் சென்று இங்குள்ள முஸ்லிம்கள் நிம்மதியற்று இருப்பதாகவும், அவர்கள் நிந்தனை செய்யப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்து வருகின்றார்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கும் இவர், ரோஹிங்ய அகதிகளை ஏன் இலங்கைக்கு அழைத்து வர முயற்சிக்கின்றார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் சிங்கள மக்களை மதிப்பது போல் நாட்டிலிருக்கும் முஸ்லிம் மக்களையும் மதிக்கின்றேன், ஆதரிக்கின்றேன், ஆனால் மியன்மாரை வெறுத்து நடக்கவும் முடியாது…” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

சசிகலா பேருந்திலிருந்து தப்பித்து ஓபிஎஸ் வீட்டிற்க்குள் ஓடிய எம்எல்ஏ! கதறிய மனனார்குடி கோஷ்டி

wpengine

வர்த்தமானி விவகாரம்!- முடிவை மாற்றிக்கொண்ட மகிந்த ராஜபக்ச

wpengine

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த PASSPORT சிங்கப்பூரிடமிருந்து…

wpengine