உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..



பாடசாலை நேரத்தில் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளை பாடசாலையின் அதிபருக்கு கட்டுப்படுத்த முடியாமல் போனால் , காவற்துறையினர் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என அந்த அமைச்சு இன்று(19) வௌியிட்டுள்ள ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காவற்துறை மா அதிபரை தௌிவு படுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் குழுக்கள் பாடசாலையினுள் நுழைந்து கல்விச் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு முன்னர் , இந்த நிலைமையை தடுப்பதற்காக கடந்த பெப்ரவரி 27ம் திகதி சுற்றறிக்கையொன்று வௌியிடப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

(rizmira)

Related posts

விசேட அதிரடிப் படையினர் வாகனம் மீதுதுப்பாக்கிச்சூடு…

wpengine

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தார் நிகழ்வுகள் இன்றும் நாளை மறுதினமும்..

wpengine