உள்நாட்டு செய்திகள்

அரச அலுவலகங்களின் அலுவலக நேரமாற்றம் இன்று(18) முதல் அமுலுக்கு…



கொழும்பு நகரத்தில் நிலவும் கடும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நடடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக பத்தரமுல்ல பிரதேசத்தில் காணப்படும் அரச அலுவலகங்களின் அலுவலக நேரமாற்றம் இன்று(18) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

குறித்த இந்த நேரமாற்றம் தொடர்பில் அரச நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று(18) தொடக்கம் மூன்று மாதங்களுக்கு நெகிழ்வான அலுவலக நேரம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன்படி, காலை 7.30 – 9.15 வரையிலான எந்த காலப்பகுதியிலும் அரச பணியாளர்கள் பணிக்கு வரமுடியும்.

அவர்கள் வருகை தரும் நேரத்தின் அடிப்படையில் சேவை நேரங்களில் கணிப்பிடப்பட்டு பிற்பகல் 3.15 – 5.30 வரையிலான காலப்பகுதியில் பணியை நிறைவு செய்ய முடியும்.

எவ்வாறாயினும் காலை 9.15 தொடக்கம் பிற்பகல் 3.15 வரையில் பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்தில் இருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்

wpengine

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வௌிநாட்டவர்கள் இருவரின் கைவரிசை..

wpengine

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அவதானம்…

wpengine