உலக செய்திகள்

லண்டனில் சுரங்க புகையிரதம் ஒன்றில் வெடிவிபத்து..



லண்டனின் பார்சன்ஸ் க்றீன் சுரங்க புகையிரத  நிலையத்தில் புகையிரதம் ஒன்றினுள் வெடிவிபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாவட்டங்களுக்கு இடையிலான புகையிரதத்தின் கடைசிப் பெட்டியில் இருந்த வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று வெடித்ததிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில், பயணிகள் சிலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

புகையிரத நிலையங்களில் செல்பி எடுக்க தடை..

wpengine

ஜி-20 மாநாட்டுக்கு சென்ற ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்…

wpengine

பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம்…

wpengine