உள்நாட்டு செய்திகள்

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு.



எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் ஐந்து மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம்  விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்னபுரி, கேகாலை , நுவரெலியா, காலி, மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் இதுவரை சிறிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ள   போதிலும், விபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிக மழையின் காரணமாக இரத்னபுரி கேகாலை , காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளில் வெள்ளம் காரணமாக 700 குடும்பங்கள் வரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று

wpengine

20வது திருத்தச் சட்டமூலம், கிழக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்..

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine