உள்நாட்டு செய்திகள்

20ம் திருத்தம் தொடர்பான விவாதம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில்…



உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான 20ம் திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த இந்த சட்டமூலம் தொடர்பிலான உயர்நீதிமன்ற அறிக்கை எதிர்வரும் வாரத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுவதோடு, இதற்கமைய குறித்த சட்டமூலம் எதிர்வரும் 20 ஆம் திகதி விவாதிக்கப்படவுள்ளதாகவும் அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தம்

wpengine

வெளிநாட்டு மருத்துவப் பட்டங்களை இலங்கையில் ஏற்றுக்கொள்ளும் சட்டம் விரைவில்..!

wpengine

சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து பலி!

wpengine