உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால’வின் சகோதரர் லால் சிறிசேன விளக்கமறியலில்..



பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பாதையில் ஏற்பட்ட வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் லால் சிறிசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பாதையிலுள்ள அதுமல்பிடிய பிரதேசத்தில் கெப் ரக வாகனம் பாதையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதி மேற்குறித்த இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் பின்னர் சந்தேக நபரான ஜனாதிபதி சகோதரர் அவ்விடத்தை விட்டும் தப்பியோடி, பின்னர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

இதன்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், நாளை(11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலன்னறுவை மஜிஸ்ட்ரேட் நீதிபதி ருவன் குமார உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்ப இரு குழுக்கள் நியமனம்…

wpengine

இலங்கையில் தனது அரிசி தொடர்பில், வதந்தி பரப்பப்படுவதாக சீனா கவலை..!

wpengine

தொடர்ந்தும் கொட்டி கொட்டி என்று கூறி தட்டிப் பணித்தால் நாட்டுக்கு நாசம் சாணக்கியன் எம்.பி

News Editor