உலக செய்திகள்

பாகிஸ்தானில் பருவமழை காரணமாக 164 பேர் பலி..



பாகிஸ்தானில் இந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு 39 குழந்தைகள் உள்பட 164 பேர் பலியாகியிருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளநீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் ஜூன் 26 திகதி முதல் செப்டம்பர் 6 வரை மட்டும் 39 குழந்தைகள் உள்பட 164 பேர் உயிரிழந்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் 440 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தில் சிக்கி இருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுபோன்று 2010ம் ஆண்டு மழை,வெள்ளத்தினால் 1500 மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

Related posts

கஜா புயல் – சில புகையிரத சேவைகள் இரத்து…

wpengine

ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு வீரரை இழக்கும் பரிதாப நிலையில் இஸ்ரேல்..!

wpengine

அமெரிக்காவில் ஒரு இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

wpengine