வாழ்க்கை

அன்னாசிப் பழச்சாறை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..



அன்னாசியிலிருந்து தயாரிக்கப்படும் சாறு இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கும். ஆனால் இதில் பல வகை ஊட்டச்சத்துகளும் உள்ளதை பலரும் அறிவதில்லை.

அன்னாசி பழச்சாறில் உள்ள மகிமைகளை அறிந்து கொள்வோம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, உடல் வளச்சியை ஊக்குவிப்பது, வீக்கத்தை குறைப்பது, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பது, மன நிலையை சமன் செய்வது, தசை ஆற்றலுக்கு உதவுவது , கருவுருதலை அதிகரிப்பது , செரிமானத்தை அதிகரிப்பது போன்றவை அன்னாசிபழத்தின் ஆரோக்கிய பலன்கள் ஆகும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது:
பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உயர் இரத்த அழுத்தத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இது ஒரு சிறந்த குழல்விரிப்பி. அதனால் ஹைப்பர் டென்ஷன் குறைகிறது. இதனால் இதய நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் மாரடைப்பு, வாதம் போன்றவற்றின் அபாயங்கள் குறைகிறது

நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது:
இந்த பழச்சாறில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதுவே உடலை காக்கும் அரணாக இருக்கின்றது.

செரிமானத்திற்கு உதவுகிறது:
அன்னாசியில் உள்ள நார்ச்சத்து , மற்றும் ப்ரோமெலைன் போன்றவை செரிமானத்திற்கு நன்மை செய்பவையாகும். செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலை தீர்க்கிறது. குடல் இயக்கத்தை அதிகப்படுத்தி சரியான ஊட்டச்சத்துகள் செரிமான மண்டலத்தில் சேர்வதற்கு உதவுகின்றன.

தீய விளைவுகள்:
இந்த பழத்தை அதிகமாக உட்கொள்வதால் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன. அவை, கர்ப்ப கால சிக்கல்கள், நீரிழிவு பாதிப்புகள் , எடை அதிகரிப்பு, ஒவ்வாமை, இரத்தப்போக்கு போன்றவை ஆகும். அதிகமான அளவு உட்கொள்ளாமல் இருப்பதால் சிறந்த பலன்களை அடையலாம்.

 

Related posts

மழை காலத்தில் குடிக்க இதமான Hot Chocolate…

wpengine

லஸ்ஸி குடிச்சா இவ்ளோ நன்மைகளா?

wpengine

உங்க நகமும் அழகா இருக்கணுமா? எலுமிச்சையை ட்ரை பண்ணி பாருங்க…

wpengine