உள்நாட்டு செய்திகள்

மஹிந்தருக்கு எதிராக 7000 முறைபாடுகள் – திணறுகிறது நிதி மோசடி விசாரணை பிரிவினர்



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இதுவரை, பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் ஏனைய விசாரணை பிரிவுகளுக்கு சுமார் 7000 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் 600 அதிகாரிகள் மாத்திரம் இருப்பதனால் குறித்த முறைபாடுகள் தொடர்பில் விரைவான விசாரணைகள் மேற்கொள்வதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அரசாங்கத்தின் போது பாரிய அளவிலான நிதி மோசடிகள் மற்றும் வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட்ட அதிகாரிகளினாலேயே குறித்த முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இதுவரை மெதுவாக இடம்பெற்று வருகின்ற குறித்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மலையகத்துக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

wpengine

ரணில் அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்..!

wpengine