உள்நாட்டு செய்திகள்

தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தினால், மண்சரிவு எச்சரிக்கை..



நாடளாவிய ரீதியில் பல இடங்களில் கடுமையான மழை பெய்து வருகின்றமையால், காலி, களுத்துறை (நாகொட/ யட்டமுல்ல) மற்றும் நுவரெலியா (அம்பகமுவ கொரல மற்றும் அதைச் சுற்றிய பிரதேசம்), விசேடமாக கினிகத்தேனை போன்ற பகுதிகளிலுள்ள மக்களுக்கு, தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தினால், மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி உள்ளிட்ட பல மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு, 100mm இற்கும் அதிகளவாகப் பதிவாகியுள்ளதாகவும் குறித்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மண்சரிவு மற்றும் ஏனைய அனர்த்தங்கள் தொடர்பாக அறிவிப்பதற்கு, 117 என்ற, தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

wpengine

தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு

wpengine

விக்கி தலைமையில் புதிய அரசியல் கட்சி….

wpengine