கேளிக்கை

முன்னணி இயக்குநருடன் கைகோர்கிறார் விக்ரம்..



`துருவ நட்சத்திரம்’, `சாமி-2′ படத்திற்கு பிறகு விக்ரம் தமிழின் முன்னணி இயக்குநருடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்தை முடித்த விக்ரம், அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் `சாமி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ல் தொடங்க இருக்கிறது.

அந்த படத்தை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விக்ரமை சந்தித்து கே.வி.ஆனந்த் கதை கூறியதாகவும், விக்ரமுக்கு அந்த கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களை தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அஜித்தின் `வீரம்’, விஜய்யின் `பைரவா’ உள்ளிட்ட படங்களை விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலை மாணவி மற்றும் ஆசிரியருக்கு அறை வசதி செய்து கொடுத்த இளைஞர்…

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சசித்திரவின் மற்றுமோர் புதிய படைப்பு.

wpengine

அக்ஷய் குமாருடன் பழகிய 45 பேருக்கு கொரோனா

wpengine