வாழ்க்கை

எல்லோரும் உங்க அழகை பார்த்து மயங்கணுமா?



சிலர் வீட்டிலேயே பலகாரங்களைச் செய்வதிலும், வீட்டை அழகுப்படுத்துவதிலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களைக் கவனிப்பதிலும் மிகவும் வேலைப்பளுவாக இருப்பார்கள். அதே சமயம் களைப்பாகவும் உணர்வீர்கள். இவ்வளவு அலுப்பு சலுப்புகளுக்கிடையிலும் நீங்கள் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, எப்போதும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் உங்களைக் காட்டிக் கொண்டால் தானே நல்லது!
இதோ அதற்கான சில டிப்ஸ்…

 

கண்கள் மிளிர:

உங்கள் களைப்பு எதுவும் வெளியில் தெரியாமலிருக்க, முதலில் உங்கள் கண்களை அழகாக அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கு மெலிதாகவும் அழகாகவும் கண்களுக்கு மை தீட்டுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் தான் கண் விழிகள் இருக்கும். அதற்கு அவர்கள் கோல்டு, ப்ரவுன், சார்கோல் கருப்பு அல்லது க்ரே கலர் ஷேடோக்களைப் பயன்படுத்தினால் கலக்கலாக இருக்கும். தேவைக்கேற்ப மஸ்காராவையும் அப்ளை செய்து கொண்டால் களைப்பு காணாமல் போகும்.

உதடுகள் ஜொலிக்க:

உங்கள் உதடுகளைப் பளபளப்பாக வைத்துக் கொள்வது அவசியம். நியூட்ரல் அல்லது பிங்க் ஷேடோக்களால் ஆன லிப்ஸ்டிக்குகளைத் தடவிக் கொள்ளுங்கள். இன்னும் அதிகம் கவர வேண்டுமென்றால், கொஞ்சம் அடர்த்தியான ஷேடோக்களைப் பயன்படுத்துங்கள்.

முகம் பொலிவு பெற:

கண்களில் மஸ்காரா அப்ளை செய்திருப்பதால், அதற்கேற்றவாறு மெல்லிய பவுடரையும் முகத்தில் அழகாகத் தீட்டிக் கொள்ளுங்கள்.

கைகளுக்கு மருதாணி:

ஆயிரக்கணக்கான டிசைன்களில் ஒரு அழகான மெஹந்தி டிசைனைத் தேர்ந்தெடுத்து, கைகளில் மெஹந்தி போட்டுக் கொள்ளுங்கள். பாரம்பரிய உடையில் மின்னுங்கள்.

Related posts

சருமத்தில் ஏற்படும் கருமையை போக்கும் ஆரஞ்சு பேஷியல்…

wpengine

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கற்றாழை…

wpengine

எந்த உணவுகளில் எந்த நெய் சேர்த்துச் சாப்பிடலாம்?

wpengine