வணிகம்

CITES மாநாட்டின் 18வது கூட்டத்தொடர் இலங்கையில்…



அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் வன சீவராசிகளை சட்ட விரோதமாக விற்பனை செய்வது தொடர்பான மாநாட்டின் (CITES) 18வது கூட்டத்தொடர் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளதுடன், அதன் ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று(30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

2019 ஆம் ஆண்டு மே மாதம் 187க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4,500 பேரின் பங்குபற்றுதலுடன் குறித்த இம்மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது. வன சீவராசிகள் தொடர்பாக செயற்திறனாக செயற்பட்டுவரும் நாடு என்ற வகையில் இது இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டன.
இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியினால் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்களான காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜோன் அமரதுங்க, நிமல் சிறிபால டி சில்வா, எஸ்.பி. நாவின்ன, திலக் மாரப்பன, ஹரீன் பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் லஸந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்

 

(rizmira)

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 180 ஐயும் தாண்டியது..

wpengine

53 ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்கள்

wpengine

உலகின் சிறந்த கடற்கரையாக உணவட்டுன கடற்கரை தெரிவு

wpengine