உள்நாட்டு செய்திகள்

செப்டம்பர் 2ம் திகதி வரை மழையுடன் கூடிய காலநிலை..



நாளை (31) முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரை நாட்டில் குறிப்பாக வடக்கு , வடமத்திய , கிழக்கு , ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை அதிகரிக்க கூடிய சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்ய கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா , கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுக்கூடும். மின்னலிலிருந்து ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

Related posts

குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

wpengine

கம்மன்பில தொடர்பில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் சட்டத்தரணி லசித

wpengine

கண்டி அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாண உடன்படிக்கை கைச்சாத்து…

wpengine